Breaking News

தேனி வளர்ப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தேவரியம்பாக்கம் மக்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா


காஞ்சிபுரம், ஜூலை 18 -

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திலுள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான தேனி வளர்ப்பு பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. 

பசுமை வளர்ச்சி மற்றும் தனிநபர் வாழ்வாதாரம் மேம்படுத்தும் நோக்குடன், இந்த பயிற்சி இந்தியன் வங்கியின் ஆர்சேட்டி(RSETI) மூலம் அளிக்கப்பட்டது.

பயிற்சியில் பங்கேற்ற 35 பேர் தேனி வளர்ப்பு முறைகள், தேனீ கம்மி நோய் தடுப்பு, தேன் சேகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல், வங்கிகளில் முதலீடு பெறுதல் போன்றவையில் விரிவாக பயிற்சி பெற்றனர். இதனையடுத்து, இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பிரிவு  மாவட்ட இயக்குநர் உமாபதி, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர்  அஜய்குமார்,  பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், மாவட்ட நிதிக் கட்டுப்பாட்டாளர் அரங்கமூர்த்தி, பயிற்சி ஆசிரியர் சிவகாமி, ஊராட்சி செயலாளர், துணைத் தலைவர் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற்றவர்களைப் பாராட்டினர்.

பயிற்சி முடித்த மகளிர் குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இந்த பயிற்சி வழியாக குடும்ப வருமானத்தை அதிகரிக்கும் வழி கிடைத்துள்ளது. நாங்கள் விரைவில் தேனி வளர்ப்பு தொழிலில் இறங்கி, ஊராட்சி மட்டத்தில் ஒரு புதிய முயற்சியாக துவங்க உள்ளோம்” என்றார்.

தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் கூறியதாவது, 

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள மகளிர் மற்றும் இளைஞ்ர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு சுயதொழில் பயிற்சிகளை அளித்து வருகிறோம் என்றார்

No comments

Thank you for your comments