Breaking News

கூட்டுறவுத்துறையில் வசூல் ஆகாத கடன்களுக்கு சிறப்புத் தீர்வுத் திட்டம் - இணைப்பதிவாளர்

காஞ்சிபுரம், ஜூலை 27: 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை வங்கிகளில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பா.ஜெயஸ்ரீ  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் வசூலாகாத நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்புக் கடன் தீர்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்ûம் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் உட்பட அனைத்து வங்கி தொடர்பானவற்றில் வழங்கப்பட்ட சிறு வணிகக் கடன்,தொழில் வணிகக்கடன், வீட்டு வசதிக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணை சாராக் கடன்கள் ஆகியனவற்றை பெற்ற உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய இனங்களில் 31.12.22 இல் முழுமையாக தவணை தவறிய நிலையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடனை தீர்வு செய்வதற்காக கடந்த 12.9.2025 ஆம் தேதிக்கு முன்பு 25 சதவிகித தொகை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாதவர்களும், 25 சதவிகிதத்தை செலுத்தி எஞ்சிய 75 சதவிகிதத்தை செலுத்தாதவர்களும் தற்போது மொத்தக் கடன் தொகை நிலுவையினை தீர்வு செய்யும் நாள் வரை 9 சதவிகித சாதாரண வட்டி ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் இச்சிறப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 31.12.2022 ஆம் தேதியில் முழுமையாக தவணை தவறிய கடன்களுக்கு தீர்வு செய்யும் வகையில் 9 சதவிகித வட்டியுடன் நிலுவைத்தொகையினை வரும் 23.9.25 ஆம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி கடனை தீர்வு செய்து கொள்ளலாம்.

தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி,அபராத வட்டி மற்றும் இதர செலவினங்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 

கடன்காரர்களின் வட்டிச்சுமையை முழுமையாக குறைக்கும் வகையில் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.9 சதவிகித சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி தங்களது கடன்களை தீர்வு செய்து பயனடையுமாறும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments