காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்து மீட்பு – அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
காஞ்சிபுரம், ஜூலை 24:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தார் மாட வீதியில் இருந்து வந்தது. ரூ.3 கோடி மதிப்புள்ள இச்சொத்தினை வடிவேலு என்பவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து இருந்தார்.
இச்சொத்தினை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமாரதுரை உத்தரவின்படி உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி மற்றும் ஆய்வாளர் அலமேலு உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள்,கோயில் பணியாளர்கள் ஆக்கிரமிப்பிலிருந்த சொத்தை மீட்டு அதிலிருந்த பொருட்களை வெளியில் எடுத்து அகற்றி அதனை பூட்டி சீல் வைத்தனர்.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி கூறுகையில் ,
மீட்கப்பட்ட சொத்தில் 4 கடைகளும், 10 வீடுகளும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Keywords/Labels : Kanchipuram, Ekambaranathar Temple, HR&CE Department, Temple Property, Encroachment Removal, Government Action, Property Sealed, Kumaradurai, Muthulakshmi, Tamil Nadu Temples, Kanchipuram News

No comments
Thank you for your comments