Breaking News

தேவரியம்பாக்கத்தில் வங்கிகள் விழிப்புணர்வுக் கூட்டம்

காஞ்சிபுரம், ஜூலை 24: 

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் ஊரட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணர்வுக் கட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணர்வுக் கூட்டம் வாலாஜாபாத் இந்தியன் வங்கிக் கிளை சார்பில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கி வாலாஜாபாத் கிளை மேலாளர் அய்யப்பன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ரம்யா ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வாலாஜாபாத் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கீதா வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி வம்சி கலந்து கொண்டு வாடிக்கையாளர் குறை தீர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் வங்கி பணிகளின் நடைமுறைகள் குறித்து பேசினார். 

இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மாவட்ட முன்னோடி மேலாளர் திலீப் பங்கேற்று தனி நபர் மற்றும் குழுக் காப்பீட்டுத் திட்டங்கள், வங்கி இணைப்பு செயலிகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கி பேசினார். 

பல்வேறு வங்கிகளின் வணிகத் தொடர்பாளர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments