Breaking News

காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் காதலன், இருவருக்கும் சாகும்வரை சிறை - காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

காஞ்சிபுரம், ஜூலை 24:

காஞ்சிபுரத்தில், காதலுக்கு இடையூறாக இருந்த இரு குழந்தைகளை தூக்குமருந்து கலந்து கொலை செய்த தாய் அபிராமி மற்றும் அவரது காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு, சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்கியது.


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்தவர் விஜய்(30) அப்பகுதியில் வங்கியில் வேலைபார்த்து வந்த இவருக்கு அபிராமி(25") என்ற மனைவியும், அஜய்(30) கார்னிகா(25)என்ற ஒரு மகனும்,ஒரு மகளும் இருந்துள்ளனர்.

அபிராமிக்கும் அதே பகுதியில் பிரியாணி விற்பனை செய்யும் கடையில் பணிபுரியும் மீனாட்சி சுந்தரம்(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அதுவே திருமணத்தை தாண்டிய கள்ளக்காதலாகவும் இருந்துள்ளது.


இந்த நிலையில் இரு குழந்தைகளும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் இருவருக்கும் பாலில் அதிகமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்து விட்டு அபிராமி காதலன் மீனாட்சி சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இருவரும் கேரள மாநிலத்துக்கு தப்பிச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது இருவரையும் குன்றத்தூர் போலீஸôர் கைது செய்தனர்.

இச்சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்தது தொடர்பாக குன்றத்தூர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வந்தனர். இரு குழந்தைகளையும் தாயே கொன்றது தொடர்பான செய்தி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளையும் உண்டாக்கி இருந்தது. 

இவ்வழக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞர் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.அரசு தரப்பில் 25 சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தனர்.

வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியும், மகளிர் நீதிமன்ற நீதிபதியுமான ப.உ.செம்மல் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். 

இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்த போது ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு அபிராமியும், மீனாட்சு சுந்தரமும் கோரிக்கை வைத்தனர். 

இருவருமாக சேர்ந்து செய்த குற்றத்தைப் பார்க்கும் போது இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினால் மட்டும் போதுமானதாக இருக்காது. 

இருவருக்கும் ஆயுள்தண்டனையும் மற்றும் சாகும் வரை சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments

Thank you for your comments