Breaking News

மாணவியை மிரட்டி, தோழிகளின் குளிப்பு வீடியோ எடுக்க வலியுறுத்திய மாணவன் கைது – மணிமங்கலம் போலீசார் நடவடிக்கை

தன்னுடன் கல்லூரியில் பயின்ற மாணவியை  வீடியோ எடுத்து மிரட்டி உடன் தங்கி இருக்கும் தோழிகளின் குளிக்கும் வீடியோ எடுத்து தர வேண்டும் என மிரட்டிய வாலிபர் கைது. 


திருவாரூர் மாவட்டம் ஆவூர் பகுதியைச் சேர்ந்த முகமது இக்லால் (வயது 22) என்ற இளைஞர், கல்லூரியில் கல்வி பயின்றுவருகிறார்.

அதே கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவியுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நெருக்கத்தை பயன்படுத்தி, இருவரும் இணைந்துள்ள சில வீடியோக்கள் மற்றும் அந்தரங்க காட்சிகளை முகமது இக்லால் தனது கைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளார்.

பின்னர், அந்த வீடியோவை வெளியிடப்போவதாக மிரட்டிய அவர், “உன்னுடன் தங்கியிருக்கும் தோழிகளின் குளிப்பு மற்றும் அந்தரங்க வீடியோவை எடுத்து எனக்கு அனுப்ப வேண்டும்” என்று மாணவியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த மாணவி தற்போது படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் தனது தோழிகளுடன் இன்டர்ன்ஷிப் காரணமாக தங்கி உள்ளார். முகமது இக்லாலின் கட்டாயத்தால், இவர் தன்னுடன் தங்கியிருந்த தோழிகள் குளிக்கும் வீடியோக்களை ரகசியமாக பதிவு செய்து அனுப்பிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஒரு தோழியின் குளிப்பு வீடியோ எடுக்க முயற்சித்தபோது, அந்த மாணவி “கையும் களவுமாக” பிடிபட்டுவிட்டார். உடனே இதைப் பொறுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, பாதிக்கப்பட்ட மாணவி “முகமது இக்லால் தன்னுடைய அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டியதால், தனது தோழிகளின் வீடியோவை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, மணிமங்கலம் போலீசார் திருவாரூர் சென்று முகமது இக்லாலைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு கல்லூரி மாணவர், தன்னுடன் பயின்ற மாணவியை காதலிக்கும்படி பழகி, பின்னர் அவளை மிரட்டி தன்னுடைய தோழிகளின் அந்தரங்கக் காட்சிகளை பதிவு செய்து அனுப்பும்படி கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Keywords/Labels : Tiruvarur, Manimangalam, Student Harassment, Blackmail Case, Private Video Threat, College Student Arrested, Sexual Coercion, Women’s Safety, Tamil Nadu Crime, Cyber Crime, Intern Girl Harassed

No comments

Thank you for your comments