Breaking News

தாறுமாறாக ஓடிய லாரி; உயிரிழந்த காவலாளி – பஜார் பகுதியில் பரபரப்பு, மக்கள் முற்றுகை

👀காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில், வட மாநில இளைஞர் ஒருவனால் ஓட்டப்பட்ட லாரி தாறுமாறாக ஓடியதில் ஒருவர் உயிரிழந்ததும், நான்கு பேர் படுகாயமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

👀  300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்து காவல்துறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் பஜார் பகுதியில் வட மாநில ஓட்டுனர் ஒருவர் லாரியை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார். அதிவேகமாக பஜார் பகுதியில் லாரியை ஒட்டியதால், பஜார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றை இடித்து தள்ளிவிட்டு வேகமாக சென்றுள்ளது. 

அப்போது அதே பகுதியை சேர்ந்த காவலாளி ஈஸ்வரன் என்பவர் அந்த வழியாக சென்றுள்ளார். அவர் மீதும் அந்த லாரி மோதியுள்ளது ‌‌. இதனால் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரன் ரத்தம் வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போ சம்பவ இடத்திற்கு விரைந்து ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள், ஈஸ்வரனை பரிசோதனை செய்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 



மேலும் இந்த சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களை மீட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஈஸ்வரனை மோதியது மட்டும் இல்லாமல் அதன் பிறகும் ஒரு சில வாகனங்களில், இடித்துவிட்டு அந்த லாரி சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுநரை சிறை பிடித்து பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்து காவல்துறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாரி தாறுமாறாக ஓடியதில் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments

Thank you for your comments