வேலூரில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வேலூர் :
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 02.08.2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலூர், ஓட்டேரி, “முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரி (தன்னாட்சி) “ வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 100 -க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலை நாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம்வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, செவிலியர், பார்மஸி, பொறியியல் போன்ற பல்வேறு கல்வித்தகுதியுடைய வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.
தனியார்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. ஆகவே, தனியார்துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வருகின்ற 02.08.2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
ஆகவே, தனியார்துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வருகின்ற 02.08.2025 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலூர், ஓட்டேரி, “முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரி (தன்னாட்சி)“ வளாகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments