கடன் வாதத்தில் வாக்குவாதம்; “நான் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டு தற்கொலை செய்த மனைவி – சுங்குவார்சத்திரத்தில் சோக நிகழ்வு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பள்ள மொளச்சூர் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் இவரது மனைவி ரவீனா, 2019 ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 4 மற்றும் 2 வயதில் இரு மகன்களும் உள்ளனர்.ஜெயபிரகாஷ் JP டிரம்ஸ் என்று பெயரில் பேண்டு வாத்தியக்குழு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள யூனியன் வங்கிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு புதியதாக கார் வாங்குவதற்காக லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் ஜெயபிரகாஷ், இதனால் ஆத்திரமடைந்த ரவீனா ஏற்கனவே நகைகளை வைத்த கடன் இருப்பதாகவும் அதையே மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் கடன் வாங்கி கார் வாங்க வேண்டுமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு கண்டிப்பாக கார் வாங்கியே தீருவேன் என ஜெயபிரகாஷூம் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் வங்கி உள்ளேயே வாக்குவாதம் முற்றியுள்ளது.
பிறகு இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். ரவீனாவை வீட்டில் விட்டு விட்டு ஜெயபிரகாஷ் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதிக்கு ஒரு வேலையாக சென்றிருந்தார். அவர் வேலையில் இருந்த போது போன் செய்த ரவீனா "நான் போய் வருகிறேன் நீ கார் வாங்கிக்கோ" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
உடனே அவரை மீட்டு கார் மூலம் முளைச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் ரவீனாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது
Keywords/Labels : Kanchipuram, Sunguvarchatram, Suicide Case, Domestic Dispute, Loan Issue, Car Loan, Family Tragedy, Ravina, Jayaprakash, Revenue Divisional Officer (RDO) Inquiry, Tamil Nadu News, Emotional Distress, Marriage Dispute

No comments
Thank you for your comments