Breaking News

கூட்டுறவுத்துறையில் வசூலாகாத கடன்களுக்கு சிறப்புத் தீர்வுத் திட்டம் – இணைப்பதிவாளர் அறிவிப்பு

 காஞ்சிபுரம், ஜூலை 27:

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வசூலாகாத நிலுவைத் தவணை தவறிய பண்ணை சாராக் கடன்களுக்கு சிறப்புத் தீர்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



இத்திட்டம், 31.12.2022 தேதி வரையிலான முற்றிலும் தவணை தவறிய பண்ணை சாராக், சிறு வணிக, தொழில் வணிக, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு வகை கடன்களுக்கு பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ்:

  • கடந்த 12.09.2023 ஆம் தேதிக்கு முன்பு 25% தொகையை செலுத்தி ஒப்பந்தம் செய்யாதவர்களும்,
  • 25% செலுத்தி இருந்தும் 75% தொகையை செலுத்தாதவர்களும்

மொத்த நிலுவைத்தொகைக்கு 9% சாதாரண வட்டி செலுத்தி, ஒரே தவணையில் கடனை முழுமையாக தீர்வு செய்யலாம்.

மேலும், இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ்:

  • 31.12.2022 வரையில் முற்றிலும் தவணை தவறிய கடன்கள்
  • 9% சாதாரண வட்டியுடன், 23.09.2025க்குள் ஒரே தவணையில் செலுத்தி தீர்வு செய்யலாம்.

இந்த திட்டத்தில்:

  • கூடுதல் வட்டி
  • அபராத வட்டி
  • இதர செலவுகள்

முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
கடனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கடனை குறைந்த வட்டி விகிதத்தில் முடித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Label: Special Settlement Scheme for Overdue Cooperative Loans in Kanchipuram

No comments

Thank you for your comments