காஞ்சிபுரத்தில் பெண் கொலையா?-போலீஸ் விசாரணை
காஞ்சிபுரம், ஜூலை 27:
காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் ஊராட்சியில் கரியன் கேட் பகுதியில் காந்தி நகரில் வசித்து வருபவர் ஜெயசுரேஷ்(35) செங்கல்பட்டில் விடுதி காப்பாளராக பணி புரிந்து கொண்டு அங்கேயே தங்கியும் இருந்து வருகிறார்.இவரது மனைவி அஸ்வினி(29) இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருந்து வருகின்றனர்.
அஸ்வினி வசித்து வரும் வீட்டுக்கு அருகில் மதுபானக்கடை இருப்பதாலும், வீட்டில் தனியாக இருப்பதாலும் வீட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரம் அருகே வையாவூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவ நாளன்று அஸ்வினி வீட்டுக்கு வராமல் இருப்பதால் அவர்களது பெற்றோர் அஸ்வினி வீட்டுக்கு அருகில் இருக்கும் உறவினர்களை நேரில் போய் பார்த்து வருமாறு கூறியதை தொடர்ந்து அவரது வீட்டின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
உடனடியாக பொன்னேரிக்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு அஸ்வினியை அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பொன்னேரிக்கரை போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

No comments
Thank you for your comments