கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உயர் கல்வி வழங்கும் காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி!
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி புதிய தரத்துடன் கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள், பயன் பெரும் வகையில் கல்வி கட்டணம் இன்றி கல்வி கற்க உதவும் என அதன் நிர்வாக மேலாளர் போஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் வெள்ளை கேட் மேம்பாலம் அருகே கடந்த 28 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது பல்லவன் பொறியியல் கல்லூரி. இதில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று தற்போது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய கல்வித் தரத்திற்கு ஏற்ப கல்லூரியை அதன் நிர்வாக மேலாளர் ஜெயபெருமாள் போஸ் தற்போது விரிவுபடுத்தி மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு முடித்து வேலை வாய்ப்புடன் செல்லும் வகையில் தற்போது கல்வி தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளிடம் தெரிவிக்கையில், சிறந்த நிர்வாக திறன் கொண்ட பேராசிரியர்களின் ஆலோசனையின் பேரிலும், கல்வியுடன் வேலை வாய்ப்பை எளிதில் பெரும் வகையிலான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் இக்கல்லூரியில் வழங்கப்பட உள்ளதாகவும் இதற்காக சிறந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் உலகளாவிய கல்வியை பெரும் வகையில் தலைசிறந்த பெஹரைன் கல்லூரி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் மேல்நிலை கல்வி கற்க வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது.
தற்போது கூட பத்து மாணவர்கள் பெகரைன் சென்று வந்துள்ளனர்.
மேலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை போக கல்லூரி கட்டணம் கட்ட இயலாத நிலையில் உள்ள மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச கல்வியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் கட்டண சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே மாணவர்கள் தலைசிறந்த இந்த கல்லூரியில் பயின்று தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
#பல்லவன்பொறியியல்கல்லூரி #இலவசகல்வி
#கிராமப்புறமாணவர்கள் #வேலைவாய்ப்புகல்வி
#BahrainAgreement #காஞ்சிபுரம்படிப்பு
#TamilnaduEducation #EngineeringAdmission2025
No comments
Thank you for your comments