Breaking News

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

 காஞ்சிபுரம், ஜூலை 22:

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலையச்செல்வி மோகன்  கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது. 1987 ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியதை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை 1989ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கிறது.

இந்த நிகழ்வின் மூலம், மக்கள் நல்வாழ்வுக்கும், குடும்ப நலத்துறைக்கும் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் நோக்கமாகும். இதனை தொடர்ந்து, மக்கள் தொகை தின உறுதிமொழியும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பின்னர், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மாவட்ட ஆட்சியரால் பகிரப்பட்டது. பேரணி, ஆட்சியர் அலுவலகம் முதல் மூங்கில் மண்டபம் வழியாக, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் நளினி, குடும்ப நலத்துறை துணை இயக்குநர் பி. கல்பனா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் எம். ராதா, மாவட்ட குடும்ப நலச்சங்க செயலக அதிகாரிகள், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments