திருநங்கைகள் இருவருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை: காஞ்சிபுரம் ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், ஜூலை 28:
இக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி. பாலாஜி உள்ளிட்டோர் முன்னிலையில் இருந்தனர்.
பொதுமக்களிடமிருந்து 392 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை தொடர்புடைய துறை அலுவலர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டன. விரைவில் அவை தீர்வு காணப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
இதையடுத்து, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், இரு திருநங்கைகள் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரா. மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments