காஞ்சிபுரத்தில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கம்
காஞ்சிபுரம் :
1987 ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. அந்நாளே உலக மக்கள் தொகை தினமாக 1989 லிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 ஆம் ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக உலக மக்கள்தொகை தினம் ஜூலை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது 34-வது உலக மக்கள் தொகை தினமாகும்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள்தொகை தினம் 2025 உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள், அரசு அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து உலக மக்கள்தொகை தினம் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இப்பேரணியில் மருத்துவ செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள், செவிலியர் கல்லூரி மாணவியர்கள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் என சுமார் 200 மாணவ/மாணவியர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது.
தொடர்ந்து உலக மக்கள்தொகை தினம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்கள்.
World Population Day, Kanchipuram Awareness Rally, Health and Family Welfare Department, District Collector Kalaichelvi Mohan, MLA Ezhilarasan, Public Awareness, Nursing Students, Government Event, July 2025 Events, India Population Awareness
No comments
Thank you for your comments