Breaking News

காஞ்சிபுரம்: 10ம் வகுப்பு மாணவிகளுக்கு பாராட்டு – 439 மனுக்கள் பெறப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்




 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக  மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்  நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,  ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள், கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பாராட்டு  சான்றிதழ்கள்  மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன்   வழங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (21.07.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்  தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

439  மனுக்கள்

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து  439  மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

100/100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்கள்

இன்று  நடைபெற்ற  வாராந்திர மக்கள்  குறைதீர்க்கும்  நாள்  கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மௌலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில்  பயிலும் மாணவி .சி.லீனா மற்றும் மாணவி.எஸ்.பூஜா ஆகிய மாணவிகளுக்கு பரிசு பொருட்கள், கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பாராட்டு  சான்றிதழ்கள்  வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவிகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஈமச்சடங்கிற்கான செலவினம் மற்றும் இயற்கை மரணமடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.5,83,000/- மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கி, பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள்.

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு - பாராட்டு பரிசுகள்:

தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களால் பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் (SIDP 3.0)  கீழ் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட இரண்டாம் பரிசு பெற்ற சிறுகளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி குழுவினருக்கு வழங்கிய ரூ. 1 இலட்சம் மற்றும் ரூ.50,000/- ற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

“நிறைந்தது மனம்”

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி சிறுகளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி குழுவினர் “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் தெரிவித்ததாவது:

பள்ளியில் பயிலும்  மாணவர்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும், புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், தொழில் முனைவோர் திறன்களை வளர்க்கவும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில்  புதிய கண்டுபிடிப்புகளை பாராட்டி மாணவர்களை  ஊக்கப்படுத்தி வருகின்றன. 

இதன்மூலம் மாணவர்களுக்கு கற்றல் அனுபவங்கள் மற்றும் வழிகாட்டுதல் மூலம்  ஆசிரியர்கள் எங்களை போன்ற மாணவர்களை ஊக்குவித்து, பள்ளிகளில் தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்களை தயார் செய்கின்றனர். பள்ளியில் பயிலும் மாணவர்கள், கல்வியில் மட்டும் அல்லாமல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தை, கொண்டு வந்து மாணவர்களை ஊக்குவித்து வரும்  மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. வெ. வெற்றிச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி,    அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments