Breaking News

வாரணவாசி ஊராட்சியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்:                    

காஞ்சிபுரம் மாவட்டம்  வாலாஜாபாத் ஒன்றியத்தில் அடங்கிய வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம், மற்றும் துணைத் தலைவர் ஏகவல்லி, வார்டு உறுப்பினர்கள் சற்குணம், விமலா சுரேஷ் மற்றும் பொதுமக்கள் காஞ்சிபுரம் வந்து  கலெக்டர் கலைச்செல்வி மோகன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.


அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் அடங்கிய வாரணவாசி ஊராட்சியில் ஆம்பாக்கம், அளவூர், தாழையம்பட்டு, ராமானுஜபுரம் உட்பட்ட  கிராமங்களில்  ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலங்களில் வாழும் (சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல்) மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும், 
  • தாழையம்பட்டு கிராமத்தில்  தனியாருக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,  
  • வாரணவாசி ஊராட்சியில் பகுதியில் உட்பட்ட கிராமங்களில் கிராம நத்தம் காலி என்று கிராம கணக்கில் உள்ளதை தற்போது வீடு கட்டி வரும் மக்களுக்கு விசாரணை செய்து கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்க வேண்டும், 
  • சமுதாயகூடம் அமைக்க கனிமவள நிதியில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 
  • வாரணவாசி பஸ் நிலையம் அருகில் தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை அகற்றி ஊராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் , 
  • மணிகுண்டு அமைக்க உள்ள இடம் புறம்போக்கு நிலம் என்றும் மேலும் போக்குவரத்து இடையூறாக இல்லை என்று அறிந்தும் காழ்ப்புணர்ச்சியால் காவல்துறை உதவியுடன் அகற்றியதை மீண்டும் அமைக்க உரிய அலுவலர் கொண்டு விசாரணை செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் 

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.


Keywords  : Kanchipuram, Varanavasi, Patta Request, Village Panchayat, Land Rights, Collector Petition, Valajabad, Government Scheme, Tamil Nadu News, Rural Development

 

No comments

Thank you for your comments