Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்த வாக்குவாதம் – கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவிப்பு


 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 51 வார்டுகளை உள்ளடக்கிய மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அண்ணா அரங்கத்தில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின், வார்டுகளின் அடிப்படை தேவைகள் குறித்தும் பாதாள சாக்கடை அடைப்பு, கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வராதது போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து பல மாமன்ற உறுப்பினர்கள் மேயரிடம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையீடு செய்தனர்.

பல கவுன்சிலர்கள், “புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டினர். இந்த விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, உறுப்பினர்கள் தங்கள் மக்கள் அவல நிலையைப் புலப்படுத்தினர்.

இதற்கு பதிலளித்த மேயர் மற்றும் அதிகாரிகள், குறித்த புகார்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

No comments

Thank you for your comments