Breaking News

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் அரசு பாலிகிளினிக் காணொலி வழியாக திறப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்குவைப்பு



 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள் வரும் பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட பாலிகிளினிக் சேவையை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

துவக்க விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. ஏழிலரசன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பின்னர், குத்துவிளக்கேற்றி, கர்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டிகள், மற்றும் முதியோருக்கான மருந்துப்பெட்டிகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கண் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் பாலிகிளினிக் பிரிவுகளை பார்வையிட்ட ஏழிலரசன், மருத்துவர்களிடம் இருந்து வழங்கப்படும் சிகிச்சை சேவைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, நல அலுவலர் அருள்நம்பி, மாமன்ற உறுப்பினர்கள் அஹிமா பேகம், இலக்கியா சுகுமார், மற்றும் பல உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments