காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், ஜூலை 18:
சர்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவுத்துறையும், காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையும் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டுறவுத்துறை அலுவலக வளாகத்தில் தன்னார்வ ரத்ததான முகாமை நடத்தினார்கள்.
கூட்டுறவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் 26 பேர் ரத்த தானம் செய்தனர். அரசு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் பாஸ்கோ பிரேம்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும், கூட்டுறவுத்துறையும் இணைந்து நடத்திய கண்தான முகாமில் 45 பேர் தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதிக்கடிதம் வழங்கினார்கள்.
ரத்ததான முகாமையும், கண்தான முகாமையும் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச்சங்க இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக கீழம்பி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சந்திப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது.
No comments
Thank you for your comments