முத்தியால்பேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் – ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம், ஜூலை 25:
முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை பார்வையிட்டு, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தேவையானவர்களுக்கு வாரிசுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமின்போது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாம் ஊராட்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Keywords/Labels : Kanchipuram, Muthiyalpet, Ungaludan Stalin Scheme, District Collector Kalaiselvi Mohan, Welfare Camp, Government Certificates, Special Camp, Public Services, Tamil Nadu Welfare Schemes

No comments
Thank you for your comments