தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் காஞ்சிபுரம் வீரர்கள் 5 தங்கம் வென்று சாதனை – அபுதாபி போட்டிக்குத் தேர்வு
காஞ்சிபுரம், ஜூலை 25:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கடந்த ஜூலை 16 முதல் 20 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கிக்பாக்சிங் எனப்படும் குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்றது.
தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகா உள்பட 28 மாநிலங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
போட்டியில் தமிழ்நாடு அமெச்சூர் கிக்பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 47 பேர் பங்கேற்றிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கிக்பாக்சிங் அசோசியேஷன் சார்பில் ஒன்மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 2 வீராங்கனைகள், 4 வீரர்கள் உட்பட 6 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாயிண்ட் பைட்டிங், லைட் காண்டாக்ட், கிக்லைட், லோகிக்புல், காண்டாக்ட் மற்றும் பாம்ஸ் என்ற 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
- காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி 3 தங்கம்,
- ரோஷினி 1 தங்கம், 2 வெள்ளி,
- சத்யா 1 தங்கம், 1 வெண்கலம்,
- சரண்ராஜ் 1 வெண்கலம்
என மொத்தம் 5 தங்கப்பதக்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இத்தகவலை ஒன் மேன் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் ஹரிஸ் தெரிவித்தார்.மேலும் வரும் நவம்பர் மாதம் அபுதாபியில் நடைபெறும் போட்டியில் இவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
Keywords/Labels : Kanchipuram, Kickboxing, National Championship, Chhattisgarh, Martial Arts, Tamil Nadu Team, Gold Medal Winners, One Men Martial Arts Academy, Abu Dhabi International Tournament

No comments
Thank you for your comments