Breaking News

கோவூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி டி.ஆர்.பாலு தலைமை


உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கோவூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி ஆர் பாலு எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, சப் கலெக்டர் மிருணாளனி ஆகியோர் உள்ளனர்


காஞ்சிபுரம், ஜூலை 16: 


தமிழ்நாடு முதலமைச்சர்  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், கோவூர் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை  குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்பெரும்புதூர்  தொகுதி எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமினை பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவித்ததன்படி, உங்களுடன் ஸ்டாலின்" என்கிற இத்திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 69 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 155 முகாம்களும் ஆக மொத்தம் 224 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக  இன்று முகாம்  ,இன்று நடைபெற்றது 

 தமிழ்நாடு முதலமைச்சர்  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், கோவூர் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை  குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் திருப்பெரும்புதூர் தொகுதி எம்பி ஆகிய தொடங்கி வைத்தனர்

தொடர்ந்து முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும், முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமினையும் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும்  குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டு, முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள்மீது பரிசீலனை மேற்கொண்டு தகுதிவாய்ந்த மனுக்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 18 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பிலான (சிறுவணிகக்கடன் தொழில்முனைவோர் கடன் மற்றும் பண்ணை சார கடன்) நலத்திட்ட உதவிகளை வழங்கி, குன்றத்தூர் நகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இம்முகாமில் மாவட்டகலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, திருப்பெரும்புதூர் சப் கலெக்டர் மிருணாளினி, குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூர் நகரமன்றத் தலைவர் .கோ.சத்தியமூர்த்தி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   



No comments

Thank you for your comments