Breaking News

வாசன் கண் மருத்துவமனையில் கண்புரை மற்றும் லேசிக் பரிசோதனை சிறப்பு முகாம்....!!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வரும் வாசன் கண் மருத்துவமனையில் ஜூலை 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை கண்புரை மற்றும் லேசிக் பரிசோதனை சிறப்பு முகாம்



சிறப்பு மருத்துவ முகாம் குறித்து பிராந்திய மருத்துவ இயக்குநர் டாக்டர் அனுஷா வெங்கடராமன் மற்றும் கண்புரை பிரிவுத் தலைவர்,ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணர் டி.ஆர். ஜெயமணிகண்டன் இணைந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தியாவில் கண்புரையால் பார்வை இழப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.இந்த கண்புரை பார்வை இழப்பை தடுக்க அரசும், தனியார் மருத்துவமனைகளும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது.



இதை மருந்துகள் மூலமா, ஊசிகள் மூலமோ தடுக்க முடியாது,அறுவை சிகிச்சை மட்டுமே சரியான தீர்வாக உள்ளது.ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை கண்புரை மற்றும் லேசிக் பரிசோதனை சிறப்பு முகாம் வாசன் கண் மருத்துவமனையில் துவங்குகிறோம் இதில்  50வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகவும் கண்புரை பரிசோதனை மேற்கொள்ள படுகிறோம்.மேலும் 20வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு லேசிக்,கான்டூரா  பரிசோதனை இலவசமாக முகாமில் நடைபெற உள்ளது.



இம்முகாமை அனைத்து பொதுமக்களும்   பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெருவ தாகவும் முகாம் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments