Breaking News

காஞ்சிபுரத்தில் மனைவி தற்கொலையால் கணவனும் தற்கொலை – போலீஸ் விசாரணை

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமம், சந்நிதி குறுக்குத் தெருவைச் சேர்ந்த நரசிம்ம பல்லவன் (36) என்பவருக்கும் காஞ்சனா (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றிருந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.



இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த ஜூலை 11ஆம் தேதி காஞ்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த கணவர் நரசிம்ம பல்லவன், தனது சொந்தமான வரதபுரம் கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில்  வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, நரசிம்ம பல்லவனின் சகோதரர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments