Breaking News

மத்திய அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கூண்டோடு கைது...!

கோவை பாலக்காடு பைபாஸ் ரோடு கற்பகம் காலேஜ் அருகே ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து மனு கொடுக்க முயன்ற மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரை டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் கூண்டோடு கைது செய்தனர்.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்காத ஒன்றிய அரசையும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சரையும் கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே. ஈசுவரன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம், காவல்துறை அனுமதி கொடுக்காததால் திடீர் ஆர்ப்பாட்டமாக மாறியது. 

அப்போது ஒன்றிய அரசையும், தமிழக மாணவ மாணவிகளுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை ஒதுக்கி கொடுக்காத ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோசம் எழுப்பினர். 

அப்போது டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் வந்த காவல்துறையினர் ஒட்டுமொத்த மறுமலர்ச்சி மக்களை இயக்கத்தினரை கூண்டோடு கைது செய்து மதுக்கரையில் உள்ள தனலட்சுமி திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க காத்திருப்பு போராட்டம் செய்ய இருந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தை காவல் துறை கைது செய்ய வந்திருப்பதை அறிந்து திடீர் போராட்டமாக மாறியது. 

தமிழ்நாடு மாணவ மாணவிகளுக்காக போராடும் ஒரே இயக்கமான மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் வே. ஈசுவரன், பொதுச் செயலாளர் பி.பி. முத்துசாமி, பொருளாளர் எஸ். பெருமாள்சாமி, துணை பொதுச்செயலாளர்கள் கந்தசாமி, பொண்ணுகுட்டி, தலைமை நிலைய செயலாளர் ராஜு, உள்ளிட்ட ஏராளமான மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தொண்டர்களையும் உறுப்பினர்களையும் திடீரென காவல்துறை கைது செய்ததால் கோவை கற்பகம் கல்லூரி சாலை அருகேயும், மற்றும் சுந்தராபுரம் மதுக்கரை ஆகிய சுற்று வட்டாரங்களில் சற்று பதட்டமான சூழ்நிலை நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் என்பது வேறு, புதிய கல்விக் கொள்கை சட்டம் என்பது வேறு என்பதை தெளிவாக புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான பணத்தை விடுவிக்காமல் இருக்க இயலாது.

அதனால் மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கல்விக்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.



No comments

Thank you for your comments