Breaking News

காஞ்சிபுரத்தில் எரிவாயு கசிவால் தீவிபத்து – கர்ப்பிணித் தாயும் 8 வயது மகளும் சோகம் ஏற்படுத்தும் வகையில் உயிரிழப்பு

காஞ்சிபுரம், ஜூலை 14:

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி தாய் மற்றும் அவரது 8 வயது மகள் சிக்கிக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணும்,அவரது மகளும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(34) நெசவாளரான இவரது மனைவி மணிமேகலை(29) கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் மகள் கிருபாஷினியுடன்(8) தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் லிங்கப்பாளையம் தெருவில் உள்ள மணிமேகலையின் தந்தை வீட்டில் தாயும்,மகளும் குளித்துக் கொண்டிருந்த போது வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக வெளியில் சென்று தப்பித்து விட்டனர். குளியலறையில் இருந்தவர்கள் விபரம் அறியாது அதை விட்டு வெளியில் வரும் போது தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். 

தாயையும், மகளையும் பலத்த தீக்காயங்களுடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தனர்.

சமையல் எரிவாயு உருளைக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணித் தாயும்,அவரது மகளும் உயிரிழந்தது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments