Breaking News

காஞ்சிபுரத்தில் பெங்களூர் மற்றும் தாம்பரத்துக்கு புதிய குளிர்சாதன பேருந்துகள் சேவை தொடக்கம்- எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம், ஜூலை 23:

காஞ்சிபுரத்தில் பெங்களூர் மற்றும் தாம்பரத்துக்கு குளிர்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகளுக்கு நிகராக அதிநவீன குளிர்சாதன வசதியுடைய பேருந்து சேவை தொடங்கப்பட்டது. 

பெங்களூர் மற்றும் தாம்பரத்துக்கு சென்று திரும்பும் வகையில் 3 குளிர்சாதன வசதியுடைய அரசுப் பேருந்துகளை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இப்பேருந்துகளில் பயணியர்களின் வசதிக்காக செல்போன் சார்ஜர், பயணிகள் பாதுகாப்பு மற்றும் நடத்துநர் வசதிக்ககாவும் தனித்தனியாக கண்காணிப்பு கேமராக்கள், பயணியர்கள் இறங்கும் இடத்தை நடத்துநர் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதி போன்ற பல்வேறு வசதிகள் இப்பேருந்துகளில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுடைய அரசுப்பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைத்ததோடு அதில் எம்எல்ஏ எழிலரசனும் பயணித்து காஞ்சிபுரத்தின் வீதிகளில் சுற்றி வந்து இறங்கினார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments