Breaking News

மேஷம் முதல் மீனம் வரை தின ராசி பலன்கள் - 25-7-2025

 




 

 

 

மேஷம்

உடலில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புதுவிதமான தெளிவுகள் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். புத்திரர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

அஸ்வினி : பிரச்சனைகள் அகலும்.

பரணி : தெளிவுகள் ஏற்படும்.

கிருத்திகை : விட்டுக்கொடுத்து செயல்படவும்.

 

ரிஷபம்

மனதளவில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணியபடி நடக்கும். உடன் இருப்பவர்கள் வழியில் சில புரிதல்கள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : குழப்பம் நீங்கும்.

ரோகிணி : ஒத்துழைப்பான நாள்.

மிருகசீரிஷம் : புரிதல்கள் உண்டாகும்.

 

மிதுனம்

பழைய பிரச்சனைகளுக்கு புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தினர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்நிலை கல்வியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் மேன்மை ஏற்படும். அடமான பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

திருவாதிரை : சாதகமான நாள்.

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.

 

கடகம்

எதிலும் திருப்தி அல்லாத சூழல் அமையும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தற்பெருமை இன்றி செயல்படுவது நல்லது. மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 6
  • அதிர்ஷ்ட நிறம் : நீலம்

புனர்பூசம் : கவலைகள் நீங்கும்.

பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

ஆயில்யம் : தேடல்கள் ஏற்படும்.

 

சிம்மம்

தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் அனுகூலமும் பிறக்கும். வாழ்க்கை துணைவருடன் அனுசரித்து செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் அமையும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். தான தர்ம செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். சமூக பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். குடியுரிமை பிரச்சனைகளால் விரயம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

மகம் : அனுகூலமான நாள்.

பூரம் : பொறுமை வேண்டும்.

உத்திரம் : விரயம் உண்டாகும்.

 

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகை மூலம் சில மாற்றம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் திருப்பங்கள் உண்டாகும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : மாற்றம் பிறக்கும்.

அஸ்தம் : சோர்வுகள் குறையும்.

சித்திரை : முன்னேற்றமான நாள்.

 

 

 

துலாம்

புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  வியாபார பணிகளை முன்னேற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். கல்வி பணிகளில் ஆதாயம் உண்டாகும். புதுவிதமான பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். உறுதி மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.

சுவாதி : முன்னேற்றமான நாள்.

விசாகம் : ஆர்வம் ஏற்படும்.

 

விருச்சிகம்

வெளிவட்டாரத்தில் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

 

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.

கேட்டை : ஒத்துழைப்பான நாள்.

 

 

 

தனுசு

நினைத்த சில பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயண செயல்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.

 

  • அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

மூலம் : விவேகத்துடன் செயல்படவும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : வரவுகள் கிடைக்கும்.

 

மகரம்

வெளிவட்டாரத்தில் புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப் போன சில காரியம் முடியும். உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பகை விலகும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

 

 

கும்பம்

எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகள் ஏற்படும். நீண்ட காலம் முதலீடு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வரவுகள் மூலம் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் மறையும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பயணங்கள் மூலம் அனுபவம் ஏற்படும். அமைதி மேம்படும் நாள்.

  • அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 5
  • அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சதயம் : சலசலப்புகள் மறையும்.

பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

 

மீனம்

குழந்தைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனைகள் ஏற்படும். மற்றவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளியூர் வர்த்தக பணிகளில் ஆதாயம் மேம்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உபரி வருமானம் வருமான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

  • அதிர்ஷ்ட திசை : மேற்கு
  • அதிர்ஷ்ட எண் : 3
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

உத்திரட்டாதி : ஆதாயம் மேம்படும்.

ரேவதி : மதிப்புகள் அதிகரிக்கும்.

 

 

No comments

Thank you for your comments