காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், ஜூன் 30:
காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் அவளூர்.ஜி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் நகர் தலைவர் சேரன்,மாநில வழக்குரைஞர் பிரிவு பொதுச் செயலாளர் குருராஜ்,வாலாஜாபாத் வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.வி.குப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்,ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்குரிய கட்டண உயர்வை திரும்ப பெறுதல்,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்துதல், 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் நீதியை அதிகப்படுத்தவும்,தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி சம்மேளனத்தின் தலைவர் ராம.சுகந்தன், ஐ.என்.டி.யூ.சி.மாநில பொதுச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக குமார் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments