அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் ...!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டலம் வார்டு என் 69 - ல் இயங்கி வரும் அண்ணா மார்க்கெட்டில் அனைத்து கடைகளையும் கட்டி முடிக்கும் வரை வியாபாரிகள் தற்போது செலுத்தும் தினசரி சுங்க கட்டணத்தை தொடர்ந்து செலுத்த வலியுறுத்தியும், பொது ஏலம் முறையை கைவிட கோரியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மாடசாமி என்கிற சந்திரன் கூறுகையில் அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடந்த 37 ஆண்டுகளாக சிறுகுறு வியாபாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் சில்லறை வியாபாரம் செய்து வருகின்றனர். நேரடியாகவும் மறைமுகமாகவும் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மார்க்கெட்டியே நம்பி வாழ்ந்து வருகின்றோம் இங்கு மொத்தம் 476 கடைகள் உள்ளன இதில் அனைத்து கடைகளையும் இடித்து புதிய கடைகளை கட்டிக் கொடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள். முதற்கட்டமாக 81 கடைகள் புதியதாக கட்டப்பட்டு இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் கடைகள் கட்டுவதற்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன .பணிகள் துவங்கிய போது வியாபாரிகளாகிய எங்களிடம் கடைகளை காலி செய்து கொடுங்கள் புதிய கடைகளை கட்டி தற்போது வியாபாரம் செய்து வரும் கடைக்காரர்களுக்கே தருகிறோம் என்று முன்னாள் மின்சார மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் எங்களிடம் வாய்மொழியாக உறுதி அளித்தனர்.ஆனால் தற்போது அனைத்து கடைகளுக்கும் புதிய சுங்க கட்டணம் அதிக அளவில் கேட்கின்றனர்.மேலும் மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து கடைகளையும் பொது ஏலத்திற்கு விட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இதனை கண்டித்து தற்போது உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.அனைத்து கடைகளையும் பொது ஏலத்திற்கு விட்டால் தற்போது கடை வைத்து பிழைப்பு செய்து வரும் 476 கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.மேலும் நாங்கள் இதை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே மாநகராட்சி அதிகாரிகள் புதிய ஏலம் விடும் முயற்சியை கைவிட வேண்டும் மேலும் அனைத்து கடைகளும் கட்டி முடிக்கும் வரையிலும் தங்களிடம் புதிய சுங்க கட்டணத்தை வசூலிக்க கூடாது என்றார். மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது இதனால் எங்களது வியாபாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது மேலும் எங்கள் குடும்பங்கள் மிகவும் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றது. இச்சூழ்நிலையில் புதிய சுங்க கட்டணம் செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லை எனவே மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் தலைமையில் நல்லாட்சி புரியும் இந்த அரசானது இந்த மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் செய்வதை மட்டுமே நம்பி கடை வைத்து வியாபாரம் செய்து வரும் பெண்களையும் உள்ளடக்கிய வியாபாரிகள் ஆகிய எங்களுக்கு அனைத்து கடைகளும் முழுவதுமாக புணரமைப்பு பணிகள் முடியும் வரை தற்போது நடைமுறையில் உள்ள தினசரி சுங்க கட்டணத்தை தொடர்ந்து நாங்கள் செலுத்த முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்று கோரிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்தார்.இந்நிகழ்வில் செயலாளர் கனகராஜ் பொருளாளர் அப்துல் சமது மற்றும் கௌரவ தலைவர்கள் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் கடை வியாபாரிகள், பெண்கள் உட்பட பலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments