ஸ்மார்ட் காக்கிஸ் திட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.கார்த்திகேயன் துவக்கி வைத்தார்..!
கோவை ஆயுதப்படை வளாகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் "ஸ்மார்ட் காக்கிஸ் "எனும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு 35 இரு சக்கர வாகனங்கள்,கை ரேகை கருவி, உபகரணங்கள் உள்ளிட்ட புதிய உபகரணங்களை காவலர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். உடன் துணை காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், ஆய்வாளர் மகேஸ்வரன், துணை ஆய்வாளர் செந்தில் வேல், அனிதா ஆகியோர் இருந்தனர்.அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது குற்றங்களை தடுத்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஸ்மார்ட் காக்கிஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக புகைப்படம் எடுத்து செயலில் பதிவு செய்தால் அவர்களின் முழு தகவல் போலீசாருக்கு கிடைக்கும் என்றும் 24 மணி நேரமும் இருசக்கர ரோந்து வாகனங்கள் காண்காணிப்பில் ஈடுபடும். மேலும், இருசக்கர பெட்ரோல் வாகனங்கள் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கு இரண்டு முதல் மூன்று வரை வழங் கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.மேலும் போதைப்பொருள் குறித்து இளைஞர்களிடம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தற்போது கல்லூரிகள் திறந்து இருப்பதினால் மாணவர்களுடன் நேரடியாக சென்று போதைப்பொருள் தீமை குறித்து எடுத்துரைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments