நைட்டிங்கேல் கல்விகுழுமத்தின் சார்பாக அன்னை மீனாட்சி மற்றும் நைட்டிங்கேல் நர்சிங் கல்லூரியில் தேர்ச்சி பெற்ற செவிலியர் பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
கோவை மதுக்கரை நைட்டிங்கேல் கல்விகுழுமத்தின் சார்பாக அன்னை மீனாட்சி மற்றும் நைட்டிங்கேல் நர்சிங் கல்லூரியில் தேர்ச்சி பெற்ற செவிலியர் பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.நைட்டிங்கேல் கல்விகுழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பழங்குடியினர் நலத்துறை மத்திய அமைச்சர் ஜூவல் ஓரம் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் சஞ்சய் பஸ்வான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மத்தியில் சிறப்புரையாற்றினார்கள். பின்னர் மாணவர்களுக்கு பட்டம் சான்றிதழ்கள் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி குறித்து மத்திய அமைச்சர் கூறுகையில் இன்று பட்டம் பெரும் மாணவ மாணவியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் வாழ்வில் சமுதாயத்திற்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் மனிதநேயமிக்கவராக திகழ வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார் மேலும் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மனோகரன் எனது நீண்ட கால நண்பர் என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன் என்று கூறினார்.நைட்டிங்கேல் கல்வி குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான மனோகரன் வருகை புரிந்த மத்திய அமைச்சர்களுக்கு உற்சாக வரவேற்பளித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு நட்ராஜ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர்கள் ராஜீவ் மனோகரன், சந்தியா ராஜீவ், சஞ்சய் மணி மனோகரன், மீனா சஞ்சய் மணி,கல்லூரி முதல்வர்கள்,பேராசிரியர்பொன்னம்மாள்,டாக்டர் அன்னம்,டாக்டர் இந்துலதா, டாக்டர் ராஜன் மற்றும் துணை முதல்வர்கள் துர்கா தேவி, டாக்டர் முகில் சிங், டாக்டர் திலகவதி, மற்றும் ஆசிரியர்கள்,முக்கிய பிரமுகர்கள் மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் உட்பட 3000திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கல்லூரி முதல்வர் டாக்டர் சோஃவியா மற்றும் மும்தாஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரையாற்றினார்கள்.
No comments
Thank you for your comments