Breaking News

பண மோசடி குற்றச்சாட்டுக்கு மறுப்பு; போலீசுக்கு நேரில் மனு அளித்த பெண் மருத்துவர் சௌமியா!

 காஞ்சிபுரம் :

உத்திரமேரூரைச் சேர்ந்த பெண் மருத்துவர் வி.ஜி. சௌமியா மீது பண மோசடி செய்ததாக ஏற்கனவே பலர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அலுவலகத்தில் நேரில் வந்து பதிலளித்தார்.



காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்த பெண் மருத்துவர் வி.ஜி.சௌமியா என்பவர் பல பேரிடம் பணத்தை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவாகியதாக கூறி அப்பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி கடந்த சனிக்கிழமை, உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர் 

இதுகுறித்தான செய்தி, நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்தநிலையில் பல பேரிடம் பணத்தை ஏமாற்றி பெற்றுக் கொண்டு தலை மறவாகியதாக கூறப்பட்ட உத்திரமேரூர் பெண் மருத்துவர்  வி.ஜீ. சௌம்யா இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  நேரில் வருகை தந்து,

தன்னிடம் பணம் கொடுத்தவர்களுக்கு, பணத்தை திருப்பி வழங்கிய நிலையில், அதிகப்படியான பணம் கேட்டு மிரட்டி புகார் அளித்து,அவதூறு பரப்புவதாகவும், தன்னை மருத்துவமனையை திறக்க விடாமல் மிரட்டுவதால் நான் சென்னையில் தங்கியுள்ளதாகவும் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தார்.

மேலும் தனக்கு கொடுத்த பணத்திற்கு மேல் அதிகப்படியான பணத்தைக் கேட்டு மிரட்டுபவர்கள் மீதும், தன்மீது அவதூறு பரப்புபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் அப்புகாரில் தெரிவித்துள்ளார்.

தலைமறைவானதாக கூறப்பட்ட பெண் மருத்துவர் உரிய ஆதாரங்களோடு வந்து  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 Keywords : Kanchipuram, Uthiramerur, woman doctor complaint, police petition, financial fraud denial, VJ Soumya, SP office, defamation, harassment, money dispute, Tamil Nadu news


No comments

Thank you for your comments