பொறியியல் படிப்புகான நுழைவுத் தேர்வில் மாநில அளவில் காஞ்சிபுரம் மாணவி முதலிடம்- ஆட்சியர் பாராட்டு
காஞ்சிபுரம், ஜூன் 30:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த ஜெயவேல்}அருணா தம்பதியரின் மகள் ஜெ.சகஸ்ரா. இவர் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான ஜெ.இ.இ. எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தமைக்காக ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் அழைத்து சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் பாராட்டினார்.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாநகர துணை மேயர் ஆர்.குமரகுருநாதன்,மாமன்ற உறுப்பினர் குமரவேல், திமுக பிரமுகர் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் நாதன் ஆகியோரும் மாணவியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments