Breaking News

விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரம் இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கல்: மரியாதை சம்பூர்ண தியாகம்

காஞ்சிபுரம், ஜூன் 30:

விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தங்களின் ஆழ்ந்த துக்கத்தையும் மீறி மனித நேயத்தோடு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.



காஞ்சிபுரம் அருகே உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், உணவக உரிமையாளர். அவரின் மகன் கவின் (18), காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 21.06.2025 அன்று, அடையாளம் தெரியாத வாகனம் அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதால் கவினுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல நாட்கள் சிகிச்சை பெற்றும் ஜூன் 30 திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், தங்கள் மகனின் மரணத்தை தழுவிக்கொண்டும், இன்னொரு உயிர் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு, கவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவரது உடல் உறுப்புகள் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மகனின் உயிர் போனாலும், பல உயிர்களுக்கு வாழ்வளிக்கிறேன் என்ற மனநிலை கொண்ட வெங்கடேசன் குடும்பம் சமூகத்துக்கு உதாரணமான தியாகத்தையும் மனித நேயத்தையும் எடுத்துக் காட்டியுள்ளது.

No comments

Thank you for your comments