தேவரியம்பாக்கத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணர்வு கூட்டம்
காஞ்சிபுரம் :
இக்கூட்டத்திற்கு கிளை மேலாளர் திருமதி கீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை அமர்வை தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவர் மு.தி. அஜய்குமார் அவர்கள் வகித்தார்.
சிறப்பு விருந்தினராக இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி திரு. வம்சி கலந்து கொண்டு, வங்கிகளின் பணி முறைகள், வாடிக்கையாளர் குறைதீர் நடவடிக்கைகள், நிதி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எளிய முறையில் விளக்கினார்.
இந்தியன் வங்கியின் எல்டிஎம் திலீப் அவர்கள் வங்கியின் சேவைகள், தனிநபர் மற்றும் குழு காப்பீடு திட்டங்கள், வங்கி இணைப்பு செயலிகள் பற்றிய பயன்களை விரிவாக எடுத்துரைத்தார்.
தலைவர் அஜய்குமார் அவர்கள், “இந்திய ரிசர்வ் வங்கி பிரதிநிதி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் நேரில் வந்து நமது மக்களுக்கு நேரடியாக சேவைகளை விளக்கியது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. கிராம மக்களுக்கான வங்கி வணிகத் தொடர்பாளர்களின் பணி பாராட்டுக்குரியது,” எனக் குறிப்பிட்டார். மேலும், தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு ஒரு ATM வசதி அமைய வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கி வாலாஜாபாத் கிளை மேலாளர் திரு. அய்யப்பன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் திருமதி. ரம்யா ராஜலட்சுமி, பொதுமக்கள், மற்றும் 20க்கும் மேற்பட்ட வங்கி வணிகத் தொடர்பாளர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
No comments
Thank you for your comments