Breaking News

ஏரியில் விழுந்த காலணியை எடுக்க முயன்றபோது ஏரியில் மூழ்கிய கல்லூரி மாணவன் - இரவு முழுவதும் தேடி உடல் மீட்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த லக்சன் செங்கல்பட்டு மாவட்டம் தனியார் கல்லூரியில் எம் எஸ் சி டேட்டா சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள சக  மாணவர்களுடன் ஊர் சுற்றிப் பார்க்க நேற்று வந்துள்ளார். நேற்று பல்வேறு கோவில்களில் சுற்றி பார்த்து உள்ளனர்.



உணவு அருந்திவிட்டு சக நண்பர்களுடன் காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை ஏரி சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளனர்.

ஏரிக்கரையை சுற்றி பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது சக நண்பரின் செருப்பு ஏரியில் விழுந்துள்ளது இதனைக் கண்ட லட்சன் தனக்கு நீச்சல் தெரியும் என்றும் தான் செருப்பு எடுத்து வருகிறேன் என்று சொல்லி ஏரியில் இறங்கியுள்ளார்.

செருப்பு எடுக்க சென்ற மாணவர் லக்சன் ஏரியில் நீந்த முடியாமல் மூச்சு திணறி நீரில் மூழ்கியுள்ளார் இதனை கண்ட சக மாணவர்கள் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி மாயமான மாணவன் லடசனை இரவு முதல் தேடி வந்தனர்.

இன்று காலை தான் மாணவனின் உடன் கண்டெடுக்கப்பட்டது உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சி தாலுகா  போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments