Breaking News

காஞ்சிபுரம் அப்போலோ தகவல் மையத்தில் லேபராஸ்கோபிக் (நுண் துளை) அறுவை சிகிச்சை, நரம்பியல், மகப்பேரியல் மற்றும் மகளிர் நோயியல் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனை

காஞ்சிபுரம்,  ஜூன் 17: 

ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனையின் அப்போலோ மருத்துவ தகவல் மையம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்  சன்னதி தெருவில்  இயங்கி வருகிறது. இந்த மையத்தில் தொடர்ந்து அனுபவமிக்க மருத்துவ நிபுணர்கள் வருகை தந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.  




அந்த வரிசையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் அப்போலோ மருத்துவ மனையின் சிறப்பு மருத்துவர்களான பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் (நுண்துளை) அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணரான  டாக்டர் பாலச்சந்தர் கரியப்பா ரெட்டி மற்றும் மகப்பேறியில் மற்றும் மகளிர் நோயியல் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீ கலா தொட்டா ரெட்டி மற்றும் நரம்பியல் மருத்துவர் டிமென்ஷியா, நியூரோசைக்கியாட்ரீ சிறப்பு நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன்  ஆகியோர் வருகை தந்து முன்பதிவு செய்த பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை செய்து, ஆலோசனைகளை வழங்கினார்கள். 

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து     "தங்கள் துறையில்  அப்போலோ மருத்துவமனை நிறுவனம்   கொண்டு வந்துள்ள  உயர் ரக சிகிச்சைகள் மற்றும் நவீன ரோபோடிக் இயந்திரங்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வது குறித்தும், ஒவ்வொரு நோய்க்கும் நோயாளிகளின் சிரமத்தை குறைத்து  விரைவாக குணமடைய  பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து சிறந்த மருந்துகளை வழங்கி வருகிறார்கள்" என்று  கூறினார்கள்.

சென்னை அப்போலோவில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களிடம் நோயாளிகள் ஆலோசனை பெற இந்த தகவல் மையம் உதவி வருகிறது.

தொற்றாநோய்களை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அவர்களுக்கு சிகிச்சையும் இந்த மையங்கள் அளிக்கும். சென்னையிலிருந்து மருத்துவர்கள் வாரந்தோறும் இந்த மையத்திற்கு வருகை தந்து ஆலோசனை வழங்குவார்கள். மேல்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் சென்னை செல்ல பரிந்துரைக்க படுவார்கள்.

அப்போலோ மருத்துவ குழுமம் நாடு முழுவதும் 300 மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களை கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவ தகவல் மையங்களை அமைத்துள்ளது.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை  அப்போலோ மருத்துவமனை  நிர்வாக இயக்குனர் பாலாஜி, காஞ்சிபுரம் நிர்வாகிகள் முருகன், மைதிலி, மார்க்கெட்டிங் பிரிவு ஸ்ரீனிவாசன்   ஆகியோர் மிகச் சிறப்பாக  செய்திருந்தார்கள்.

No comments

Thank you for your comments