Breaking News

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியாரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ...!



கோவை தொண்டாமுத்தூர் தொகுதி,குனியமுத்தூர் பகுதி,87வது வார்டு நிர்வாகத்தின் சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததானம் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் V. ராஜ்குமார் மற்றும் புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் பூமார்க்கெட் S. சரவணன் ,மாவட்ட நிர்வாகிகளும் குனியமுத்தூர் பகுதி செயலாளர் H. பைசல் மற்றும் பகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டு இரத்ததானம் முகாமை தொடங்கி வைத்தனார். இந்நிகழ்வில் குனியமுத்தூர் 87வது வார்டு செயலாளர் R. ரஹ்மான், இணை செயலாளர் சித்திக் பாஷா, துணை செயலாளர் சாதிக் பாஷா, பொருளாளர் K. ஹரிஹரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பூத் நிர்வாகிகள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர், 



இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்துடன் வந்து இரத்ததான முகாமில் கலந்து கொண்டனர் அதை தொடர்ந்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 50கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டனர்.

No comments

Thank you for your comments