Breaking News

தவெக தலைவரின் 51ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா..!



கோவை தவெக புறநகர் வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூர் பகுதி 93 வது வார்டில் மகளிர் அணி சார்பாக தவெக தலைவரின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.



முன்னதாக யோக விநாயகர் கோவிலில் தளபதியாரின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினார்கள்.



 இதில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் தமிழ்ச்செல்வி, ஹாலீஸ், பிரசன்னா,நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தவெக கட்சி அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலைகள் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கினர். 




மேலும் புதிதாக கழகத்தில் இணைந்த 50கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் லீலாவதி, லலிதா, கல்பனா, மாலதி, கனகமணி, பானு, அன்பிலா, ஜோதி, கீதா, மற்றும் ஜீவிதா , தொண்டரணி, இளைஞர் அணி நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள் , உறுப்பினர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments