தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்திலுள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளில் எங்கு நின்றாலும் அங்கு திமுக தான் வெல்லும் - மாவட்ட செயலாளர் எம்எல்ஏ க. சுந்தர் பேட்டி
காஞ்சிபுரம் ஜூன் 4:
அந்த வகையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள பவள விழா மாளிகையில், காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் கெளரவிப்பு விழா நடைபெற்றது.இதில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரறிஞர் அண்ணா மு கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கினார்கள்.
இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி.சிறுவேடல் செல்வம், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் ஒன்றிய குழு தலைவர்களை மலர்கொடி குமார், ஆர் கே தேவேந்திரன், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் பி எம் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், திலகர், வெங்கடேசன், உள்ளிட்டோர் பங்கேற்று தமிழ் அறிஞர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனர்.
முன்னதாக காஞ்சிபுரம் மாநகரத்திலுள்ள கச்சபேஸ்வரர் கோவில் அருகே, காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே என பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்
இந்நிலையில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம் எல் ஏ செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக பரவலாக பேசப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய
கேள்விக்கு அவர் பதல் அளிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகள் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள 234- சட்டமன்ற தொகுதிகளில் தவெக தலைவர் நடிகர் விஜய் எங்கு நின்றாலும் அங்கு திமுக தான் வெற்றி பெறும் என பதில் அளித்தார்.
No comments
Thank you for your comments