முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதியின் 102- வது பிறந்தநாள் விழா- அன்னதானம் நீர் மோர் க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
காஞ்சிபுரம், ஜூன் 4:
அந்த வகையில், மாநில வர்த்தக அணி மற்றும் மாவட்ட ,மாநகர, பகுதி வர்த்தக அணி சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் ஆயிரம் பேருக்கு சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கினார்.
முன்னதாக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி. எஸ். ராமகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்து வரவேற்று பேசினார். மாநகராட்சி கவுன்சிலர் மல்லிகா ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்.பி.சிறுவேடல் செல்வம்,காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி மூர்த்தி, பகுதி செயலாளர் திலகர், மாநகர துணை செயலாளர் முத்து செல்வம், நெசவாளர் அணி மலர்மன்னன், தொமுச பேரவை இளங்கோவன், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜாபர், நிர்வாகிகள் ,பழனிவேல், சீனிவாசன், அருள் பிரகாசம் ஷா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)

No comments
Thank you for your comments