Breaking News

முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதியின் 102- வது பிறந்தநாள் விழா- அறுசுவை உணவுகளை க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

காஞ்சிபுரம், ஜூன் 4: 

தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்ந  டாக்டர் மு.கருணாநிதியின்  102-வது பிறந்தநாள் விழாவினை, தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் கேக் வெட்டி  நலத்திட்ட உதவிகள் வழங்கி விமர்சையாக செம்மொழி நாளாக கொண்டாட திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 


அந்த வகையில், மாவட்ட இளைஞரணி சார்பில் காஞ்சிபுரம் கச்சப்பேஸ்வரர் கோவில் அருகே அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

இதில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்,உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினர்.

முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்  ஏற்பாடுகளை செய்து வரவேற்று பேசினார்.    இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்.பி.சிறுவேடல் செல்வம்,

காஞ்சிபுரம்  தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர் திலகர்,திமுக நிர்வாகிகள் கௌரி சங்கர்,இளம் பரிதி,சிலம்பு செல்வன்,குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments