Breaking News

SDAT ஸ்டார் அகாடமி வாள்வீச்சு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார்!

 


காஞ்சிபுரம் : 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில், காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் SDAT ஸ்டார் அகாடமி வாள்வீச்சு பயிற்சி மையம் புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பயிற்சி மையத்தில் பயிற்சியாளர்களுக்கு வாள்வீச்சு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, அவர்களது பயிற்சியை நேரில் பார்வையிட்டார்.

இந்த மையத்தில் 12 முதல் 21 வயதுவரை உள்ள 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவியர்கள் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவச பயிற்சி, காலை சிற்றுண்டி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ரூ.2,500 மதிப்பிலான விளையாட்டு சீருடை ஆகியன வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

மேலும், நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட கண்காணிப்பாளர் கி. சண்முகம், “மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கினால், அரசுப் பணிகளில் உயர்ந்த பதவிகளைப் பெறலாம்; தனியார் துறையிலும் வெற்றிபெறலாம்” என உறுதியூட்டினார்.

இந்நிகழ்வில் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட விளையாட்டு அலுவலர்  கோ.சாந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் வீரர்/வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments