பிளஸ் டூ தேர்வில் சாதனை பெற்ற மகிழ்ச்சியில் பள்ளித் தாளாளருக்கு மாணவர்கள் முத்தமிட்டு நன்றி தெரிவித்த நெகிழ்ச்சி நிகழ்வு!
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, தொடர்ந்து பிளஸ் டூ வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றுவரும் சாதனையை இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது.
இவ்வாண்டு பிளஸ் டூ தேர்வு முடிவுகளில், 417 மாணவர்கள் (149 மாணவிகள் உட்பட) தேர்வுக்கு வெளியேறும் நிலையில், அனைவரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் மதிப்பெண்களை தாளாளர் அருண்குமாரிடம் பகிர்ந்தனர். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாணவர்கள் தாளாளரின் காலில் விழுந்து ஆசி பெற்றும், அவரை கட்டியணைத்து முத்தமிட்டும் தங்களின் பேருமகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நெகிழ்ச்சி தரும் நிகழ்வை பார்த்த பள்ளியின் செயலாளர் ரமேஷ், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பெருமிதம் அடைந்தனர்.
மாணவர்கள், "இலவசமாக வழங்கப்பட்ட NEET வகுப்புகள் எங்களுக்கு 100/100 மதிப்பெண்கள் பெற மிகவும் உதவியாக இருந்தது" என தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments