மக்கள் பங்கேற்புடன் மிளிர்ந்த கிராம சபை – தேவரியம்பாக்கம் சமூகத் தணிக்கையில் முன்னுதாரணம்!"
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGS) 2024-25ஆம் நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து நேரடி விளக்கங்களுடன் நடத்தப்பட்ட இந்தத் தணிக்கை, ஓர் மாதிரி சமூகத் தணிக்கையாக (pilot Audit) நடத்தப்பட்டது.
தேவரியம்பாக்கம் ஊராட்சி பல்வேறு முன்னேற்றப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு செயல்பட்டதன் அடிப்படையில், வாலாஜாபாத் ஒன்றியத்தில் மாதிரி சமூகத் தணிக்கைக்காக இவ்வூராட்சி தேர்வு செய்யப்பட்டது குறித்து தலைவர் அஜய்குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தணிக்கையின் போது, MGNREGS திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட்டனர். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், மகளிர் குழு நிர்வாகிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வள அலுவலர் திரு கே. இரமணஜோதி, பிற மையங்களைச் சார்ந்த 6 வட்டார வள அலுவலர்கள், ஊராட்சி தலைவர் திரு அஜய்குமார், துணைத்தலைவர் திரு கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தை சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments