காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் -அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அறம் வளர்த்த நாயகி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் இனியரசு தலைமை தாங்கினார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஜி.செல்வம் எம்பி, டி.வி.கோகுலக்கண்ணன், மலர்விழி குமார், மாவட்ட பொருளாளர் சன்பிராண்டு ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்று பேசுகையில் இக்கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மட்டுமல்ல மண்டல பொறுப்பாளர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவரது அறிமுக கூட்டமாக இக்கூட்டம் அமைந்துள்ளது
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர் அப்பொழுது நான்கு தொகுதிகளும் அமோக வெற்றி பெற்றது ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதி மட்டும் தோல்வியை தழுவியது
இந்த முறை அது போன்று இல்லாமல் காஞ்சிபுரம் உத்திரமேரூர் செய்யூர் மதுராந்தகம் ஆகிய நான்கு தொகுதிகளும் வெற்றி பாடுபட வேண்டும் உழைக்க வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு சாதனை திட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் அந்தத் திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் அணிகளின் நிர்வாகிகளும் முழுமையாக ஒத்துழைப்போடு செயல்பட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என பேசினார்.
மண்டல பொறுப்பாளரும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்யூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் இசை, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சூர்யா வெற்றிகொண்டான், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அருண்குமார், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சாரதி மணிமாறன் ஆகியர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.
இதில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசுகையில் திமுகவிற்கு பொதுமக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை உள்ளது.
அதேபோன்று பல்வேறு நல்ல திட்டங்களை தமிழ்நாட்டில் செய்து உள்ளதால் திமுக கட்சி நன்மதிப்பை பெற்றுள்ளது.
ஆகவே வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடம் திமுகவினர் உரிமையுடன் வாக்கு கேட்கலாம்.
நான்காண்டு காலமாக பல்வேறு நல்ல திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கிக் கொடுத்துள்ளார் அதை அனைவரும் பயன் பெற்றுள்ளனர்.
ஆகவே தேர்தல் பொறுப்பாளர்களும் வாக்குச்சாவடி முகவர்களும் மாவட்ட நிர்வாகிகளும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஊர் கூடி தேர் இழுப்போம் வெற்றி பெறுவோம்.
கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதி தோல்வி அடைந்தது இந்த முறை அதையும் வெற்றி பெற செய்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மீண்டும் திமுக கோட்டை என நிரூபிக்க வேண்டும்.
தொகுதி வாரியாக தேர்தலுக்கான கூட்டங்கள் நடைபெறும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் செயல்பாட்டிற்கு செம்பட்டி அடி அடித்து இந்தியாவிற்கே உதாரணம் ஆக தமிழகம் திகழ்ந்துள்ளது என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் நாராயணன் சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், ராஜேந்திரன், எழிலரசி சுந்தரமூர்த்தி,
மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், கெ. ஞானசேகரன்,
சாலவாக்கம் டி.குமார், சேகர், குமணன், கே.கண்ணன், ஜி. தம்பு, பி.எச்.சத்திய சாய், பென். சிவக்குமார், வி.ஏழுமலை, இ. சரவணன், ஏ.சிற்றரசு, எம்.எஸ்.பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன்,
செங்கல்பட்டு மாவட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சிவராமன், ராஜா ராமகிருஷ்ணன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் புருஷோத்தமன் துணை அமைப்பாளர் சிவக்குமார் தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சியாவுதீன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் பாரத், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments