காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி முகாம்! - பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கு 1434-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி முகாம் 21.05.2025 முதல் 29.05.2025 வரை நடைபெறுகிறது.
இந்த முகாமை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
இதுபோல, வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாலாஜாபாத் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கு 1434-ம் பசலிக்கான ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
No comments
Thank you for your comments