Breaking News

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 86ஆவது நிறுவனர் தின விழா சிறப்பாக நடைபெற்றது

காஞ்சிபுரம், மே 23, 2025:




இந்த நிகழ்வு, MAHER பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் திரு. ஆகாஷ் பிரபாகர் மற்றும் வேந்தர் திருமதி ஜெயந்தி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், இந்திய தரக் கட்டுப்பாட்டு குழுமத்தின் (ISO) சார்பில் நடைபெற்றது.

விழா, மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்று, மரு. சரவணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவின் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் மரு. கே.வி. ராஜசேகர், நிறுவனர் தலைவரின் அருமையும், உயர்ந்த பண்புகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மரு. பூபதி, சுற்றுசூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வூட்டிய உரையாற்றினார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் ஈஸ்வரி, மரம் வளர்ப்பின் அருமையை பற்றி வியாழமாக விளக்கினார்.

விழாவுக்கு முன்னதாக, மரம் நடும் நிகழ்வு மற்றும் மரங்களை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மரங்களை தமிழக வனத்துறை வழங்கி உதவியது.

மருத்துவ கல்லூரியின் மூத்த பேராசிரியர் சீனிவாசன் மற்றும் பேராசிரியர் லலிதா ஆகியோர், நிறுவனர் தலைவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்தனர். மேலும், விழா நிகழ்வின் ஒரு பகுதியாக பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மரு. தீபிகா சந்திரசேகரன் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் மருத்துவ பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், மாணவர்கள், மருத்துவ மாணவிகள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழா முழுவதையும் கல்லூரி ISO தலைவர் பேராசிரியர் சரவணகுமார் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.

No comments

Thank you for your comments